Dr.ஸ்ரீகாந்த் ஜிச்கர் - ஓர் அசாதாரண அரசியல்வாதி !
ஜிச்கர், 1954-இல் மகாராட்டிர மாநிலத்தில், நாக்பூர் அருகே ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி மகனாகப் பிறந்தவர். 1980 முதல் 1992 வரை, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இரு முறை மாநில அமைச்சராகவும் இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். 1992 முதல் 1998 வரை ராஜ்ய சபா உறுப்பினராக, பல பாராளுமன்றக் குழுக்களில் சிறப்பாக பணி புரிந்தவர்.
இவரது தனிச்சிறப்பு, மருத்துவம், சட்டம், மேலாண்மை, ஜர்னலிசம் ஆகியவற்றில் பெற்ற உயர்கல்விப் பட்டங்கள் போக, 10 துறைகளில் முதுகலைப் பட்டமும் (MA in 10 subjects), சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டமும் வாங்கியவர். எல்லாவற்றிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பது மற்றொரு சிறப்பு. இத்தனை பட்டங்களையும் பெற அவருக்கு மொத்தம் 18 (1972 - 90) வருடங்களே பிடித்தது. இந்த கால கட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 84 தேர்வுகளை எதிர் கொண்டிருக்கிறார் ! கிட்டத்தட்ட 28 தங்கப் பதக்கங்களை படிக்கும் காலத்தில் வென்றிருக்கிறார் ! மொத்தம் 20 பட்டங்களை பெற்ற இவர், இந்தியாவிலேயே அதிகம் படித்த மனிதராக அறியப்படுகிறார்.
படித்துப் பட்டம் பெற்றதோடு நிற்காமல், 1978-இல் IPS தேர்விலும், 1980-இல் IAS தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால், அரசியல் மேல் இருந்த நாட்டத்தால், 1980-இல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தனது 25-வது வயதில் (இந்தியாவிலேயே இளைய) சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
ஸ்ரீகாந்த் ஜிக்சர் நாக்பூரில் 1993-இல் நிறுவப்பட்ட காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் என்ற பெருமை பெற்றவரும் கூட. அதை நிறுவுவதற்கு இவர் அரும்பாடு பட்டிருக்கிறார். வருடந்தோறும், இவர் மத்திய பட்ஜெட் குறித்து ஆற்றும் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வர். UNO, UNESCO போன்ற உலக நிறுவனங்களுக்குச் சென்று, இந்தியாவின் சார்பாக, பல குழுக்களுக்கு தலைமை தாங்கி அற்புதமான உரைகள் பல நிகழ்த்தியிருக்கிறார்.
புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 3 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது தனி நூலகத்தில் 52000 அரிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார் ! நாக்பூர் டைம்ஸ் மற்றும் நாக்பூர் பத்திரிகா வெளியிடும் நவசமாஜ் பத்திரிகை நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
சின்மயா யுவகேந்திராவின் முதல் தலைவராக இருந்து, நாடு முழுதும் பயணம் செய்து, பல கிளைகளை நிறுவி, சமூகத் தொண்டாற்றியிருக்கிறார். இந்துமதக் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய தலைப்புகள் குறித்து உரையாற்றுவது இவருக்கு பிடித்தமான ஒன்று, பல உரைகள் நாடெங்கிலும் நிகழ்த்தியிருக்கிறார். குழந்தைகளையும், இளைஞர்களையும் ஊக்குவித்து, நல்வழி செலுத்துவதில் மிக்க ஈடுபாடு உடையவர்.
குரான், பைபிள், வேதங்கள் என்று மூன்றையும் பயின்று அறிஞராக அறியப்பட்டவர். ராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்து, தனது 22-வது வயது முதலே, உரைகள் நிகழ்த்தி வந்துள்ளார்.பன்முகங்கள் கொண்ட ஓர் அசாதாரண மனிதர் இவர் திகழ்ந்தபோதும், மிக்க தன்னடக்கமும், அமைதியான சுபாவமும் கொண்டவர்.
ஒரு வகையான கொடிய புற்று நோயினால் 2000-இல் பீடிக்கப்பட்ட இவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று, ஒரு வருடத்தில் பூரண குணமடைந்தார். ஆனால், விதியின் கோர விளையாட்டைப் பாருங்கள் ! ஜூன் 2004-இல், நாக்பூருக்கு அருகே உள்ள கொந்தாலி என்ற இடத்தில் இவர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் ஒரு பேருந்துடன் மோதி ஏற்பட்ட கொடிய விபத்தில், தனது 49-வது வயதில் காலமானார்.
ஜூனியர் விவேகானந்தர் என்று கொண்டாடத்தகும் வகையில் வாழ்ந்து மறைந்த Dr.ஸ்ரீகாந்த் ஜிச்கரின் நினைவை போற்றுவதற்காக எழுதப்பட்டது இப்பதிவு. இந்த உன்னதமான மனிதரைப் பற்றி இங்கே வாசித்து விரிவாகத்தெரிந்து கொள்ளலாம்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 296 ***
8 மறுமொழிகள்:
Test comment !
பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலா.
ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
நன்றி, ஜீவா !
இவரைப் போல் பலர் நம்மிடையே இருந்தும், பெரும்பாலும் நாம் தான் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
Good Post ....
Good One!
Thanks!!
இக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இவர் சுவாமி விவேகாநந்தரோடு ஒப்பிடத்தக்கவரென நினைக்கும்போதே நீங்களும் அதையே கீழே பதிந்துள்ளீர்கள்!அறிவாளிக்கு அற்ப ஆயுள்.என்ன செய்ய?பெரிய இழப்புத்தாம்.:-((((((
பதிவுக்கு மிக்க நன்றி பாலா.
Good info..Thanks for posting :)
Sivabalan, Srirangan ayyA, Gopalan ramasubbu,
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !
Post a Comment